கோட்டாபய ராஜபக்ஷ ஒதுங்கி விட்டார்.. இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார்.. ஆனால் அவரை ஆட்சியில் இருந்து நீக்க போராடிய அனைவரும் தம் இறுதி மூச்சை விடும் முன் அதற்காக வருத்தப்படுவார்கள்.



கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து நீக்க முன்வந்த, போராடிய சகலரும் தாம் இறுதி மூச்சை விட முன்னரேனும் அதற்காக வருத்தப்படுவார்கள்.


அவரை போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றிலும், இனியும் தேடிப்பிடிக்க முடியாது.


துரதிஷ்டவசமாக மக்கள் உண்மையான தலைவர்களுக்கு இடம் வழங்குவதில்லை.


அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார், இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார்.


என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று எரிவாயுவும், எரிபொருளும் மட்டுமே இல்லை, ஏனைய அனைத்தையும் இந்த நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

ஆனால் இவற்றை உற்பத்தி செய்யாது, சகல பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள நினைத்ததன் விளைவாகவும், கடன்களை பெற்று நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்த காரணத்தினாலுமே மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் நாம் தள்ளப்பட்டோம்.


எனினும் இன்று நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டுள்ளது.


தட்டுப்பாடுகள் இல்லாது மக்களுக்கு பொருட்கள் கிடைக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.


அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பிரச்சினைகள் முழுமையாக தீரும் என நம்புகின்றோம். அதுமட்டுமல்ல, கோட்டாபய ராஜபக்சவை
ஆட்சியில் இருந்து நீக்க முன்வந்த, போராடிய சகலரும் தாம் இறுதி மூச்சை விட முன்னரேனும் அதற்காக வருத்தப்படுவார்கள்.


அவரை போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றிலும், இனியும் தேடிப்பிடிக்க முடியாது. ஊழல் செய்யாத ஒரு அரசு தலைவரே கோட்டாபய ராஜபக்ஷவேயாகும்.


அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பாதாள உலக கோஷ்டியேனும் தலைதூக்கவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவித தாக்குதல்களும் நடத்தவில்லை. மக்கள் உண்மையான தலைவர்களுக்கு இடம் வழங்குவதில்லை என்பது துரதிஸ்டவசமாகும்.


இனியும் இதனை கதைத்து அர்த்தமில்லை. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார், இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார் எனவும் மஹிந்தானந்த தெரிவித்தார.
கோட்டாபய ராஜபக்ஷ ஒதுங்கி விட்டார்.. இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார்.. ஆனால் அவரை ஆட்சியில் இருந்து நீக்க போராடிய அனைவரும் தம் இறுதி மூச்சை விடும் முன் அதற்காக வருத்தப்படுவார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஒதுங்கி விட்டார்.. இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார்.. ஆனால் அவரை ஆட்சியில் இருந்து நீக்க போராடிய அனைவரும் தம் இறுதி மூச்சை விடும் முன் அதற்காக வருத்தப்படுவார்கள். Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.