இலங்கை அதிகாரிகள் தவறான வகை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ததால் தான் மின்வெட்டு அதிகரித்தது - எந்த பிரயோசனமும் இல்லாத அதனை வேண்டுமென்றால் இப்போது குடிக்கலாம்.



இலங்கை அதிகாரிகள் தவறான வகை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க, அதில் தவறான வகை நாப்தா திரவம் உள்ளதாக தெரிவித்தார்.


புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் உள்ள நாப்தாவில் அதிக அளவு கந்தகம் உள்ளது, அதை மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது என்று அவர் விளக்கினார்.


புதிய கச்சா எண்ணெய் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த ஜனக ரத்நாயக்க, அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அதனை இப்போது குடிக்கலாம் என்றும் கூறினார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை அதிகாரிகள் தவறான வகை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ததால் தான் மின்வெட்டு அதிகரித்தது - எந்த பிரயோசனமும் இல்லாத அதனை வேண்டுமென்றால் இப்போது குடிக்கலாம். இலங்கை அதிகாரிகள் தவறான வகை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ததால் தான் மின்வெட்டு அதிகரித்தது - எந்த பிரயோசனமும் இல்லாத அதனை வேண்டுமென்றால் இப்போது குடிக்கலாம். Reviewed by Madawala News on September 26, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.