ஈரானில் பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டம்.



ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணொருவர் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.


இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்காக
பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


குறிப்பாக அப்பெண்ணின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் நேற்று முன்தினம் திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஈரான்
ஜனாதிபதி இப்ராகிம் ரைசிக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட
பெண்கள் ‘சர்வாதிகாரிக்கு
மரணம்’ என்ற கோஷத்தையும்
எழுப்பினர். பல பகுதிகளில்
போராட்டக்காரர்கள்
மீது பொலிஸார் தடியடி
நடத்தியதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டம்.  ஈரானில்  பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டம். Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.