இலங்கை அணியின் வெற்றியை பல நூறு யானை வெடிகளை கொளுத்தி கொண்டாடிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள்.



இருபதுக்கு 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற 12ஆம் திகதி இரவு ரித்திகல

வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ஐநூறுக்கும் மேற்பட்ட யானை வெடிகளை வெடிக்க வைத்து வெற்றியை கொண்டாடியதாக தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.


அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்த வனஜீவராசிகள் காரியாலயத்தின் உத்தியோகத்தர்கள் அன்று இரவை மது அருந்திவிட்டு, யானை வெடி வெடித்து கொண்டாடியமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்தார்.


ரித்திகல வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகள் காட்டு யானைகளை விரட்டுவதற்காக பொதுமக்களுக்கு யானை வெடிகளை விநியோகித்தமைக்கான ஆவணங்களைத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.


இருபதுக்கு 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற அன்று இரவு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளுக்கு மதுபானம் வழங்கி மகிழ்வித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் வெற்றியை பல நூறு யானை வெடிகளை கொளுத்தி கொண்டாடிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள்.  இலங்கை அணியின் வெற்றியை பல நூறு யானை வெடிகளை  கொளுத்தி கொண்டாடிய வனஜீவராசிகள் அலுவலக  அதிகாரிகள். Reviewed by Madawala News on September 30, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.