இந்தியாவில் இருந்து வருகை தந்த கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் உடன் தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் சந்திப்பு.



(அஷ்ரப் ஏ சமத்)

மறைந்த தலைவா் எம்.எச்.எம். அஷ்ரப்புடன் இலக்கிய நட்புடன்  பழகியவரும்   கவிஞருமான   ஜெயபாலனுடன்  கடந்த வாரம் இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்தாா். அவருடன் கொழும்பில் உள்ள தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் எழுத்தளாா்கள் நட்புறவுச் சந்திப்பு நிகழ்வு ஒன்று நேற்று 23) வியாழக்கிழமை  கொழும்பு 2 ல் உள்ள தாருஸ்ஸலாம் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு    முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.  இச்சந்திப்பில் முஸ்லிம் மீடீயா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்காா், மற்றும் கவிஞா் டொக்டா் தாசீம் அகமத்,  மேமன் கவி, கவிஞா் ஹசீர்,  கின்னியா அமீர் அலி,  ஆகியோறும் உரையாற்றினாா்கள்.   அத்துடன் கலைஞா்கள் எழத்தாளா்கள் தமது கேள்விகளை ஜெயபலானுடன் பரிமாறிக் அதற்கான பதிலையும் கேடடறிந்து கொண்டனா்.

இங்கு ஜெயபாலன் உரையாற்றுகையில் 

நான் நடிப்புத்துறையை விட கவிஞனாகவே வாழ விரும்புகின்றேன்.  இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தமிழ் முஸ்லிம் . மலையக நட்புறவுக்காக இந்த நாட்டில் வாழும் சகல பிரதேசங்களுக்கும் சென்று அங்குள்ள  மக்களுளையோடு கலந்து பேசியுள்ளேன், மொனராகலையில் உள்ள ஒரு முஸ்லிம் கிராமத்திற்குச் சென்றுள்ளேன், ஏறாவூரில் தோழர் பசீர் சேகுதாவுத்துடன் , அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள், திக்குவலை்க்குச் சென்று திக்குவலை கமால் வீட்டில் தங்கி நின்று அங்குள்ள மக்களையேல்லாம் சந்தித்துள்ளேன். அத்துடன  மறைந்த தலைவா் அஷ்ரப் அவா்களுடன் தமிழ் முஸ்லிம நட்புறவுனை வழர்ப்பதற்காக எனது எழுத்துக்கள் கவிதைகள் வெளிக்கெனா்ந்துள்ளேன்.  இந்தியாவில் கூட தமிழ் நாட்டில் காயிதே மில்லத் செய்த பணிகள் இன்றும் அங்கு எடுத்துயம்பப்படுகின்றன. தமிழ் நாட்டில் வாழும்  6வீத முஸ்லிம்கள் இன்றும் நட்புடன் வாழ்கின்றனா்.  எனவும் ஜெயபாலன் கூறினாா்.


இந்தியாவில் இருந்து வருகை தந்த கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் உடன் தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் சந்திப்பு.  இந்தியாவில் இருந்து வருகை தந்த கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் உடன் தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் சந்திப்பு. Reviewed by Madawala News on September 23, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.