நிதி நெருக்கடியை சமாளிக்க, தண்டவாளங்களை விற்க தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் ; போக்குவரத்து அமைச்சர் பந்துலரயில்வே சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு தேவையான அடிப்படை கருவிகளை இறக்குமதி செய்ததிலும் நிதி நெருக்கடி காணப்படுகிறது. ஆகவே பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள ரயில் தண்டவாளங்களை சர்வதேச விலை மனுகோரலுக்கமைய விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பொல்கஹாவெல- குருநாகல் ரயில் பாதையை இரட்டை வழி பாதையாக மாற்றியமைக்கும் செயற்றிட்டம் எப்போது நிறைவு பெறும் என்பதை குறிப்பிட முடியாது.


இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியால் அரச முறை கடன் மீள் செலுத்தல் இடைநிறுத்தப்பட்டு உள்ளது.


மறுபுறம் அரச முறை கடனை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


இக்காரணிகளால் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கான முதலீட்டு தவணை ஒதுக்கீடும் தாமதப்படுப்பட்டுள்ளன.


பொல்கஹாவெல- குருநாகல் இரட்டை வழி ரயில் பாதை அபிவிருத்திக்கான நிதியுதவியும் அவ்வாறே தாமதப்படுத்தப்பட்டுள்ளன.


தேசிய நிதியை கொண்டு இந்த அபிவிருத்தி பணியை முன்னெடுக்கவும் முடியாது.


நாணயத்தை அச்சிட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும்.


அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளத்தை செலுத்துவது கூட சவால்மிக்கதாக உள்ளது என்றார்.
நிதி நெருக்கடியை சமாளிக்க, தண்டவாளங்களை விற்க தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் ; போக்குவரத்து அமைச்சர் பந்துல நிதி நெருக்கடியை சமாளிக்க,  தண்டவாளங்களை விற்க தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் ;  போக்குவரத்து அமைச்சர் பந்துல Reviewed by Madawala News on September 22, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.