ஆடை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்.


 

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது பொருத்தமான

ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட  தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பிலான சுற்று நிரூபத்தினை தயாரிப்பதற்குரிய ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது, பெண்கள் சேலையும், கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு பொருத்தமான உடையையும், அணிய வேண்டும் என சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், ஆண்களுக்கு வெள்ளை நிற மேற்சட்டையும், கருப்பு நிற காற்சட்டையையும் அலுவலக ஆடையாக பரிந்துரைக்கவும், சப்பாத்து அணிவதனை கட்டயாமாக்குவதற்கும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும்,  பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன  தெரிவித்துள்ளார். 

ஆடை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம். ஆடை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம். Reviewed by Madawala News on September 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.