சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எவ்விதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை - ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எவ்விதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை என ஜனாதிபதி தனக்கு அறிவித்ததாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

மேலும், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு மட்டுமே எட்டப்பட்டதாகவும், இது குறித்து அமைச்சரவையிலும் கலந்துரையாடப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தாக சபாநாயகர் சபையில் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து சபாநாயகர், பிரதமர், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எவ்விதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை - ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எவ்விதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை - ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார். Reviewed by Madawala News on September 22, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.