இலங்கையில் எந்த ஊரிலும் காணாத கடலரிப்பை , நிந்தவூரில் கண்டு கொண்டேன் ; கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்

 


நிந்தவூர் கடலரிப்பு விவகாரம் - கரையோர பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர்

நாயகம் கள விஜயம் 

நூருள் ஹுதா உமர்

நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் வை எல் சுலைமாலெப்பையின் அழைப்பினையேற்று, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆர்.ஏ.எஸ். ரணவக்க, (28) நிந்தவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார் 


நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக நிலவி வரும் தொடர் கடலரிப்பின் மூலமாக ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்ட அவர் எதிர்காலத்தில் கடலரிப்பினைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவரினை அமைக்கும் நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.


இலங்கையில் எந்த ஊரிலும் ஏற்படாத கடலரிப்பினை, நிந்தவூரில் தான் கண்டுகொண்டுள்ளதாக தெரிவித்த அவர், நிரந்தர தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரைவில் செய்து நிந்தவூர் பிரதேசத்தில் கடல் அரிப்பினை தடுப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


இந்த விஜயத்தின் போது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், உப தவிசாளர் வை எல் சுலைமாலெப்பை,  பிரதேச சபை உறுப்பினர்களான எம் எம் எம் . அன்சார், சட்டத்தரணி ரியாஸ் ஆதம், ஏ.அஸ்வர், கே.எம். ஜாரிஸ், எம் மஜீத், ஏ எம் வாஹிட் மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கான கலையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் எம்.துளசிதாசன், நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டு கழகத்தின் தலைவரும், சமூகவியலாளருமான எம் சி எம். றிபாய் மற்றும் மீனவர்களான மஜீத், நிசார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் வை எல் சுலைமாலெப்பை கருத்து தெரிவிக்கையில், நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினைத் தடுப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் யாவும் வெற்றி அடைந்துள்ளது. நல்லது நடக்க இறைவனை பிரார்த்திப்போம். எனக் குறிப்பிட்டுள்ளார்


இலங்கையில் எந்த ஊரிலும் காணாத கடலரிப்பை , நிந்தவூரில் கண்டு கொண்டேன் ; கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் இலங்கையில் எந்த ஊரிலும் காணாத  கடலரிப்பை , நிந்தவூரில் கண்டு கொண்டேன் ;   கரையோர பாதுகாப்பு  திணைக்கள பணிப்பாளர் Reviewed by Madawala News on September 29, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.