தங்கம் கண்டெடுத்து கையளித்த மாணவர்களுக்கு பாராட்டு.பாடசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க நகை உரிய ஆசிரியையிடம் ஒப்படைப்பு

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி
மாணவர்களது பாராட்டத்தக்க செயல்

அஸ்ஹர் இப்றாஹிம்


கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 09 சீ பிரிவை சேர்ந்த மாணவர்களான என்.எம்.சப்ரின் , கே.கைப் சக்கி மற்றும் ஏ.எம்.எம்.அஸ்ஜத் ஆகிய மூன்று மாணவர்களும் சுமார் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் (2,80,000) ரூபாய் பெறுமதி மிக்க தங்க கைப்பட்டி ஒன்றை கண்டெடுத்த கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்த நிகழ்வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இத் தங்க கைப்பட்டியானது இக் கல்லூரி ஆசிரியை ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாணவர்களும் இது விடயமாக உரையாடி தரம் 09 பகுதித் தலைவர் எம்.எஸ்.ஏ.சிராஜ் ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ் மாணவர்களது நன்நெறி மிக்க முன்மாதிரி நடத்தையினை கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் பாராட்டியதுடன் , பகுதி காலைக் கூட்டத்தில் குறித்த ஆசிரியையிடம் அந்த தங்க நகை ஒப்படைக்கப்பட்டது.
தங்கம் கண்டெடுத்து கையளித்த மாணவர்களுக்கு பாராட்டு. தங்கம் கண்டெடுத்து கையளித்த மாணவர்களுக்கு பாராட்டு. Reviewed by Madawala News on September 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.