அநுராதபுரத்தில் குடிநீர்த்தொகுதிகள் கையளிப்பு



இர்ஷாத் இமாமுதீன்


IHHNL இன் அனுசரணையில் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேஷன் ஏற்பாட்டில் அனுராதபுரத்தில் ஏழு குடிநீர்த் தொகுதிகள் கையளிக்கும்  நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (22) நடைபெற்றன.


அநுராதபுரத்தில் அமைந்துள்ள புளியங்குளம் அந்நஹ்ழா அஹதிய்யா பாடசாலை, பகல புலியம் குளம் சிங்கள வித்தியாலயம், புளியங்குளம் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித், மரியம் தக்கியா, பிலால் தக்கியா,கொல்லன்குட்டிகம முஸ்லிம் வித்தியாலயம், இர்ஷாதியா மத்ரஸா போன்றவற்றுக்கே  குடிநீர்த் தொகுதிகள் கையளிக்கப்பட்டன.


இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகமட் பாத்திஹ் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பயனாளிகளுக்கு குடிநீர்த்தொகுதியை கையளித்தார்.


இந்நிகழ்வுகளில் ஊர் பிரமுகர்களும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

அநுராதபுரத்தில் குடிநீர்த்தொகுதிகள் கையளிப்பு அநுராதபுரத்தில்  குடிநீர்த்தொகுதிகள் கையளிப்பு Reviewed by Madawala News on September 26, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.