மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை ; ஜனாதிபதி



 இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம்

செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


“நாங்கள் IMF உடன் விவாதித்தோம். நாங்கள் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்திற்கு வந்துள்ளோம். ஆனால் இப்போது நாங்கள் எங்கள் கடன் வழங்குனர்களை சமாளிக்க வேண்டும். நாங்கள் முன்பு அதைச் செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் இந்த கடுமையான நெருக்கடி எங்களிடம் இல்லை. ஆனால், இப்போது நாங்கள் எங்கள் கடன் வழங்குனர்களை சமாளிக்க வேண்டும்,” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


கடன் தொடர்பான உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு இடம்பெற்ற பின்னர் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் இடம்பெறும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்ப்பது மூன்று கடன் வழங்குனர்களும் எவ்வாறு கடன் நிவாரணம் வழங்கப் போகிறது என்பது குறித்த ஒப்பந்தத்தையே என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை ; ஜனாதிபதி  மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை ; ஜனாதிபதி Reviewed by Madawala News on September 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.