நுவரெலியாவில் பாதுகாப்பற்ற படகு பயணம்... ஆபத்தானதாக மாறியுள்ள சொகுசு சவாரி.


நுவரெலியா கந்தேஎல நீர்த்தேக்கத்தில்  சுற்றுலா பயணிகளை படகு மூலம் அழைத்துச்

செல்வது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.


நுவரெலியாவிற்கு வரும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் குறித்த நீர்த்தேக்கத்தில்  படகு மூலம் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இந்த  நீர்த்தேக்கமானது, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், இங்கு  வசிக்கும்  சிலர் பிளாஸ்டிக் பீப்பாய்களைப் பயன்படுத்தி தயாரித்த பல படகுகளில், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.


ஒரு படகில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 20 சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லப்படுகின்றனர்.


அந்த படகுகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு ஜாக்கெட் வழங்கப்படுவதில்லை.  


இது தொடர்பில் நுவரெலியா அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோனிடம் வினவியபோது, படகில்  பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, பாதுகாப்பு அங்கியை வழங்குமாறு படகுச் சேவையை நடத்துபவர்கள், பல தடவைகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர் என்றார்.


அத்துடன் இங்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுச் சேவையை முறையாகப் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் நுவரெலியா பிராந்திய செயலாளருக்கு மாவட்டச் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நுவரெலியாவில் பாதுகாப்பற்ற படகு பயணம்... ஆபத்தானதாக மாறியுள்ள சொகுசு சவாரி. நுவரெலியாவில் பாதுகாப்பற்ற படகு பயணம்...  ஆபத்தானதாக மாறியுள்ள சொகுசு சவாரி. Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.