அனுராதபுரம் மாவட்டத்தின் விளச்சிய பிரதேச
செயலக பிரிவுக்கு உட்பட்ட 3 பாடசாலைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், உணவு இன்மையினால் நேற்று மயக்கமடைந்து விழுந்துள்ளதாக இன்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறித்த பிரதேச செயலகத்தின் சித்தார்த்த மகா வித்தியாலயம், கிம்புலாவ காமினி வித்தியாலயம் மற்றும் ஆனந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்களை தொடர்புகொண்டு வினவியதாகவும் குறிப்பிட்டார்.
20க்கும் மேற்பட்ட மாணவர்கள், உணவு இன்றி மயக்கமடைந்த சம்பவம்.
Reviewed by Madawala News
on
September 22, 2022
Rating:

நாளை அல்லது நாளை மறுநாள் சனாதிபதி காரியாலயம் மாணவர்கள் போஷாக்கு இன்றி மயங்கி விழுந்தது பச்சப் பொய், வதந்தி உண்மைக்கு புறம்பான செய்து என ஆதாரத்துடன் செய்தி வௌியிடும். அப்போது நாட்டின் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்த மாதிரிதான்.
ReplyDelete