VIDEO : பல உணவுபொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் வீழ்ச்சியடைந்தது கொழும்பிற்கு மட்டுமா?



 கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பில் பல உணவுபொருட்களின் மொத்த மற்றும் சில்லறை

விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.


எனினும், இந்த நன்மை வெளி மாகாண மக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதால், அதனைத் தடுக்கும் வகையில், திறந்த கணக்கு முறை மூலம் இறக்குமதியாளர்கள் பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தது.


அதன்படி இன்று புறக்கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் நாம் மேற்கொண்ட சோதனையின் போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சற்று குறைந்துள்ளதைக் அவதானிக்க முடிந்தது.


கடந்த காலத்தில் வேகமாக விலை அதிகரித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், சிவப்பு வெங்காயம், பருப்பு ஆகிய பொருட்களும் காணப்பட்டன.


மொத்த விலை குறைவினால் கொழும்பு சில்லறை விற்பனை நிலையங்களிலும் விலை குறைந்துள்ளது.


எவ்வாறாயினும், கொழும்பிற்கு வெளியே உள்ள சில கடைகளில் வெங்காயம், பருப்பு, கிழங்கு மற்றும் காய்கறிகளின் விலை இன்றும் புறக்கோட்டை மொத்த விலையை விட அதிகமாக காணப்பட்டது.


VIDEO : பல உணவுபொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் வீழ்ச்சியடைந்தது கொழும்பிற்கு மட்டுமா? VIDEO :   பல உணவுபொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் வீழ்ச்சியடைந்தது கொழும்பிற்கு மட்டுமா? Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.