இனிமேல் Pickme ஊடாக வீட்டில் இருந்தபடியே கடலுணவுகளை Online மூலம் பெற்றுக் கொள்ளலாம் ; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை Online மூலம் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன் விற்பனை நிலையத்தில் இன்று (15) சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
அதனடிப்படையில் இன்று தொடக்கம் “Pickme” சேவை ஊடாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் இருந்து தேவையான கடலுணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிமேல் Pickme ஊடாக வீட்டில் இருந்தபடியே கடலுணவுகளை Online மூலம் பெற்றுக் கொள்ளலாம் ; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Reviewed by Madawala News
on
August 15, 2022
Rating:

No comments: