-ஹஸ்பர்_
நல்லாட்சிக் காலத்தில் பல்வேறு அநீதிகளுக்கு உள்ளாக்கப் பட்ட முஸ்லிம் சமூகத்திற்கான
நீதியை பெற்றுத்தர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முன்வருவாரா? என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று(04) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
நல்லாட்சி அரசு அமைவதற்கு முஸ்லீம் சமூகம் கூடுதல் பங்களிப்புச் செய்தது என்பதற்காக பாரிய அநீதி இழைப்புக்கு உள்ளாக்கப் பட்டார்கள்.
அம்பாறை தாக்குதல்,
திகன தாக்குதல்,
ஏப்ரல் 21 தாக்குதல்,
வைத்தியர் ஷாபி மீதான தாக்குதல்,
முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல், வாகனங்கள், உயிர்கள் மீதான தாக்குதல்,
பள்ளிகள், குர்ஆன் பாடசாலைகள், மீதான தாக்குதல்,
முஸ்லீம்களின் ஆடை சுதந்திரம் மீதான தாக்குல் ,
முஸ்லீம் தனியார் சட்டம் மீதான தாக்குதல் என பல்வேறு தாக்குதல்கள் அநியாயமாக அரங்கேற்றப் பட்டிருந்தும் இதுவரை உரிய நீதியை பெற்றுத் தரவோ, சூத்திர தாரிகளை கண்டு பிடிக்கவோ, இழப்பீடுகளை வழங்கவோ நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
இருந்தும் சர்வகட்சி ஆட்சிக்கு முஸ்லீம் கட்சிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பாதிக்கப்பட்ட இந்த முஸ்லீம் சமூகத்திற்கு உரிய நீதியை பெற்றுத்தர முன்வர முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: