முஸ்லிம் சமூகத்தை கூறுபோட்ட தலைமைகள் தற்போது விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டுக்கு செல்வது என தடுமாறுகின்றனர்... இது இறைவன் கொடுத்த தீர்ப்பு.



ஹஸ்பர்_

கட்சி சார்ந்த அரசியலை விடவும் நாட்டு மக்கள் சார்ந்த நலனில் அக்கறை கொண்ட தீர்மானத்தை கட்சி தலைமைகள் முன்னெடுத்து சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் (14) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்


பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றினைந்து கட்சி சார்ந்த நலன்களை விட பொருளாதார நிலைமைகளை சீரமைத்து நாட்டை கட்டியெழுப்ப ஒன்றினைய வேண்டும் இதுவே எமது கட்சியினதும் தலைமையினதும் எமதும் நிலைப்பாடாக உள்ளது.


கடந்த காலங்களில் பல ஜனாதிபதியின் கீழ் அமைச்சரவை அமைச்சராக செயற்பட்டு பல நஷ்டமடைந்த நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனமா மாற்றியமைத்து றிசாத் பதியுதீன் திறம்பட எடுத்துக் காட்டியுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று கொள்வதாக இருந்தால் கட்சி தலைமைகளுக்கு பொறுப்பு வாய்ந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க கூடிய அமைச்சை வழங்க வேண்டும்.


இதில் கட்சி உறுப்பினர்களை விட கட்சி தலைமைகளுக்கு மதிப்பளித்து நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தியாக்க கூடிய நல்ல பல திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்..


தற்போது தட்டுப்பாடின்றி எரிவாயு ,டீசல் ,பெற்றோல் சில பொருட்களின் விலை குறுகிய காலத்தில் கிடைக்ககூடிய வாய்ப்பில் உள்ளது. ஜனாதிபதி தன்னுடைய முதலாவது அமர்வில் பயங்கரவாத சட்டம் சர்வதேசத்தில் இருக்கின்ற புலம்பெயர் சமூகங்களின், மலையக ,தமிழ் முஸ்லிம்களின் தீர்வு பற்றி கொள்ளை பிரகடனத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.


எதிர் வரும் மார்ச்,ஏப்ரல் மாதமளவில் பொதுத் தேர்தலை நடாத்தி நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்ற இரண்டரை வருடங்களுக்குள் ஜனாதிபதியாக அதிகாரத்தை கொண்டு மக்கள் ஆட்சியை நிலையாக நிறுத்த முடியும் என்பது ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் பொறுப்பாக உள்ளது.


தனி நபராக இருந்து 134 ஆசனங்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவாகி இருப்பதை கட்சி தலைமைகள் மீண்டும் ஒரு முறை சிந்திக்க வேண்டும்.


..வரும் மாதம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அரசை சீராக கொண்டு செல்ல மக்களுக்கு சாதகமான திட்டங்களே வகுக்க வேண்டும்.


கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தை கூறுபோட்ட தலைமைகள் தற்போது விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டுக்கு செல்வது என தடுமாறுகின்றனர் இது இறைவன் கொடுத்த தீர்ப்பு .பல சமூகம் வாழும் இந்த நாட்டில் ..ஏனைய நாட்டு மக்களின் நம்பிக்கை பெற வேண்டும்...இன ஒற்றுமையை சீரழிக்க தேவையற்ற ஆணைக்குழுக்கள், தனி நபர் குழுக்கள் இன்றி செயற்பட வேண்டும்


சுயநலமல்லாத நாட்டு மக்கள் மீது கரிசனை கொண்ட ஆட்சியை சகல கட்சி தலைமைகளும் இணைந்து செயற்படுவது நல்லதொரு பலன் மிக்க நாட்டை கட்டியெழுப்பு பேருதவியாக இருக்கும் என்றார்.

முஸ்லிம் சமூகத்தை கூறுபோட்ட தலைமைகள் தற்போது விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டுக்கு செல்வது என தடுமாறுகின்றனர்... இது இறைவன் கொடுத்த தீர்ப்பு. முஸ்லிம் சமூகத்தை கூறுபோட்ட  தலைமைகள் தற்போது விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டுக்கு செல்வது என தடுமாறுகின்றனர்...  இது  இறைவன் கொடுத்த  தீர்ப்பு. Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.