IMF வேண்டாம் என்றால் தீர்வுகளை கூறுங்கள் - எந்த மருந்தும் கசப்பானது அல்லது நீங்கள் ஊசிகளை எடுக்கவேண்டும்; ஜனாதிபதி



காலியாகியுள்ள கஜானாவுடன் பொருளாதார நெருக்கடியில்
சிக்குண்டுள்ள
நாட்டிற்கு தலைமை வகிக்கும் சவாலான பணியை எதிர்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி விரைவான பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கும் கடன்பேண்தகு தன்மையை உறுதி செய்வதற்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கைக்கு கருத்தொருமைப்பாட்டுடனான ஆதரவை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சி மாறும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை கைவிடும் நீண்டவரலாறு இலங்கைகு உள்ளது.

ஆளும் பொதுஜனபெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஏனைய இடதுசாரிக்கட்சிகளும் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அதேவேளை வலதுசாரி கட்சிகள் சர்வதேச கடன்கொடுப்பனவாளரின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

2019 இல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன 2015 முதல் பதவியிலிருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை கைவிட்டது.

அந்த அரசாங்கத்தில் ரணில்விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்தார்.


நாங்கள் விரும்புகின்றோமோ இல்லையோ நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும்,சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்

இலங்கையை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகம் ஏற்பாடு செய்துள்ள பொருளாதார மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் இலங்கை ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்துகொள்வதை நாங்கள் ஏற்கவில்லை என நாடாளுமன்றத்தின் எந்த உறுப்பினரோ அல்லது கட்சியோ தெரிவித்தால் நாங்கள் உங்கள் தீர்வு என்ன - மாற்றுதிட்டமென்ன என அவர்களிடம் கேள்வி எழுப்பவேண்டியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் இந்த உடன்படிக்கையை பின்பற்றவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்போது எதிர்கொள்கின்ற முக்கிய விவகாரம் என்னவென்றால் அரசாங்கம் மாறுவதும் கொள்கை மாறுவதுமே என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க நாங்கள் உடன்படிக்கைக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடு சர்வதேச நாணயநிதியத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லாவிட்டால் நாடாளுமன்றம் அதற்கான விளைவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒருபகுதியை அரைவாசியை ஏற்றுக்கொள்கின்றோம் அரைவாசியை நிராகரிக்கின்றோம் என தெரிவிக்க முடியாது நாங்கள் முழுமையாக அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்,
ஆகவே இது நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான விடயம் மாத்திரமல்ல எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்குள் தீர்மானங்களை எடுப்பவர்கள் மீது நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ளவர்கள் செல்வாக்கு செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை ஜனாதிபதி இது கசப்பானதாகயிருக்கலாம் ஆனால் எந்த மருந்தும் கசப்பானது நீங்கள் ஊசிகளை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
IMF வேண்டாம் என்றால் தீர்வுகளை கூறுங்கள் - எந்த மருந்தும் கசப்பானது அல்லது நீங்கள் ஊசிகளை எடுக்கவேண்டும்; ஜனாதிபதி IMF வேண்டாம் என்றால் தீர்வுகளை கூறுங்கள் - எந்த மருந்தும் கசப்பானது அல்லது நீங்கள் ஊசிகளை எடுக்கவேண்டும்;  ஜனாதிபதி Reviewed by Madawala News on August 05, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.