கைதான ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சட்டத்தரணிகள் நாங்கள் காசு வசூலித்தோமா?



J.f.காமிலா பேகம்
காலிமுகத்திடலில் "கோட்டா கோ கம" 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏற்கனவே மிரிகானை சம்பவம் தொடக்கம் கோட்டா கோ கம அசம்பாவிதங்கள் மற்றும் கைதுகள் தொடர்பில் பல சட்டத்ததரணிகள் , இலவசமாக ஆஜராகி, கைதானவர்களுக்காக நீதிமன்றில் வழக்காடுகின்றனர்.

இதில் ஒரு சிலர் பிணையில் விடுதலையாகியும் உள்ளனர்.


நிலமை இவ்வாறு இருக்க நேற்று சில ஊடகங்கள் சட்டத்ததரணிகள் "இலவசம் என்ற பெயரில் கைதானவர்களிடம் காசு அறவிட்டே வழக்குகளுக்கு ஆஜராவதாக செய்தி வவெளியிட்டிருந்தது.


இது பல சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.


இது தொடர்பில் இவ்வழக்குகளில் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார எமது இணையத்ததளத்துக்கு கருத்து தெரிவிக்கையில்

"நான் நினைக்கிறேன் இதுவரை பல பிரபல ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போராட்டக்காரர்களுக்காக சட்டத்தரணிகள் இலவசமாக ஆஜராவதாக கூறினாலும், அவ்வாறு இலவசமாக ஆஜராவதில்லை என இப்போது செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.


எங்களுக்கு தெளிவாக தெரியும் இது இந்த அரசுக்கு சார்பான ஒரு சில சட்டத்தரத்தரணிகள் மற்றும் சமூக ஊடகவியலாளர்களது செயல் என்பது.

நான் மிக பொறுப்புடன் கூறுகிறேன் இதற்கு ஒரு நல்ல உதாரணம் தான், நேற்றைய நாள் ஆசிரியர் சங்கத்தலைவர் ஜோஸப் ஸ்டாலின், கொஸ்வத்தே மஹநாயக்க தேரர் அவ்வாறே இலங்கை வங்கி சேவை சங்கத்தின் உறுப்பினர்கள் இருவர் ஆகியோரை கைது செய்த பின்னர், கோட்டை நீதிமன்ற நீதவானின் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். நேற்று இந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,ஜனாதிபதி சட்டத்தரணி M.சுமந்திரன் மற்றும் சிரேஷ்ட சட்டத்ததரணி ஷிராஸ் நூர்டீன்,சுனில் வட்டகல உற்பட சுமார் 20, 25 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.இவ்வாறு வருகை தந்த சட்டத்ததரணிகள் யாவரும் ஒரு சதம் கூட கட்டணம் அறவவில்லை.


ஜனாதிபதி சட்டடத்தரணி சாலிய பீரிஸ் சட்டத்தரணிகள் சங்கம் என்ற வகையில் அல்ல அவர் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி சட்டத்தரணி என்றவகையிலேயே முன்வந்தார்.நேற்று முன்தினம் கூட சட்டத்ததரணிகள் முன்வந்திருந்தனர்.அந்த சந்தர்ப்பத்தில் " ரெட்டாவை" ஆஜர்படுத்தியபோது சட்டத்தரணிகள் முன்வந்திருந்தனர்.


இதைவிட. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல பெருந்தொகையான வழக்கறிஞர்கள் இந்த போராட்டக்காரர்களுக்காக ஆஜராகி இருந்தார்கள். யாரிடமும் எந்த கட்டணமும் இதுவரை அறவிடாது, போராட்டக்காரர்களுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளுக்கு ஆஜராகி வருகின்றனர்.



அன்று மிரிகானையில் நடந்த சம்பவம் தொடக்கம் இதுவரை பல வழக்குகளுக்கு முன்வந்துள்ளனர்.


இதன் காரணமாக நான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்வதாவது என்னவென்றால், போராட்டக்காரர்கள் சம்பந்தமாக சட்டடத்தரணிகளுக்கு அறிவிக்கப்பட்டால் அல்லது தெரியவந்தால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் அல்லது இவ்வாறு நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்போகிறார்கள் என தெரிவந்தால்,அக்குறித்த சகல வழக்கறிஞர்களும் எந்த கட்டணமும் வசூலிக்காது, ஆஜராகி உள்ளார்கள்.


இங்கே இப்படியும் சில நடந்துள்ளன.சிலர் கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் கைதிகளின் பெற்றோர் அல்லது உறவினர் அல்லது நண்பர் குழுவினர் சிலவேளைகளில் வேறு சட்டத்தரணிகளுக்கு காசை கொடுத்து அவர்களுக்காக ஆஜராகுமாறு கேட்டுகொள்கின்றன சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ளன.


அவ்வாறான சந்தர்ப்பங்களை நாம் மாற்ற முடியாது.எமக்கு அவற்றை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.யாராவது சட்டத்தரணியை அவர்கள் கட்டணம் செலுத்தி எடுக்கிறார்கள்.ஆனால் அவர்கள் போராட்டத்துக்கு சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகளுக்கு அல்லது வட்சப் குழுவிற்கு தெரியப்படுத்தினால்,எமக்கு 5 அல்லது 6க்கு மேற்பட்ட வட்சப் குழுக்களில் 400/500 சட்டத்தரணிகள் இருக்கின்றனர்.


அவ்வாறே இலங்கை முழுவதும் கற்றறிந்த சட்டத்தரணிகள் வலையமைப்புகள் /தளங்கள் உள்ளனன.ஆகவே எங்காவது ஓரிடத்தில் சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக அண்மையில் உள்ள சட்டத்தரணிகளை தொடர்புபடுத்தி உதவிகளை வழங்குகிறோம்.


அத்துடன் நாம் தெளிவாக கூறுகிறோம் ,அதன் பிறகும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.நான் நினைக்கிறேன் எனது நண்பர் சட்டத்தரணி அமில எகொடமாவத்த என்பவர் சுமார் 500 அல்லது 600 கேஸ்களை கையாண்டுள்ளார்.

நான் சுமார் 200/300 கேஸ்களை கையாண்டுள்ளேன்.வழக்குபக்கம் விசேடமாக அமில பார்த்தார்.இதைவிட இளம் சட்டத்தணிகள் குழுவில் நுவன் போப்பகே போன்றவர்கள் ஊடாக நாம் விடயங்களை முன்னெடுத்தோம்.இதைவிட மே 9 க்காக "யுக்த்திய குழு,மற்றும்
"ஜூலை 9 " போன்ற குழுக்கள் செயல்பட்டன."யுக்த்திய உதேசா" குழு, சட்டத்ததரணிகள் என பல்வேறு குழுக்கள் இவ்வாறு செயல்படுகின்றன.
ஆகவே நான் பொறுப்புடனும் தெளிவாகவும் கூறுகிறேன், போராட்டத்துக்கு ஆரம்பத்திலிருந்தே கொடுத்த ஆதரவை ,சட்டஉதவியைஇந்த தருணம் வரை அதே முறையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் வழங்கி வருகிறோம்.தற்போது அரசினால் இப்போராட்டத்தை ஒடுக்க ,இன்னுமொரு மிக
கீழ்த்தரமான பிரச்சார திட்ட வேலைகளில் ஒரு பகுதியே இந்த பிரச்சனை.எமக்கு தெரியும், அரசியல் ஸ்திர தன்மையை பேண பாடுபடும் சட்டத்ததரரணிகளும் நாட்டில் உள்ளனர்.

அவர்களும் ஒவ்வொரு கதைகளை சொல்லி போகின்றனர்.


எமக்குத்தெரியும் ..அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காகாக. அரசின் ஒவ்வொரு பதவிகளில் உள்ளனர்.

ஒருவகையில் நியாயம் தான் அவர்களது பதவிகளை காப்பாற்ற அரசை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.நாட்டில் எவ்வளவு கொள்ளையடித்தாலும் பரவாயில்லை.

நாட்டில் ராஜக்ஷ ரெஜிமேயை காப்பாற்ற வேண்டும்.ஆகவே அவர்களுக்கு இருக்கும் உரிமையை நாம் கௌரவப்படுத்துகிறோம்.


ஆனால் நாம் மிக தெளிவாக கூறுகிறோம், சட்டத்தரணிகள் இந்தப் போராட்டக்காரர்களுக்காக ஆஜராவதை நிறுத்த மாட்டோம்.அன்று ஆரம்பித்தது போலவே இன்றும் ஆதரவை அதே முறையில் நடைமுறைப்படுத்துவோம்" என தெரிவித்தார். 
கைதான ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சட்டத்தரணிகள் நாங்கள் காசு வசூலித்தோமா?  கைதான ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சட்டத்தரணிகள் நாங்கள் காசு வசூலித்தோமா? Reviewed by Madawala News on August 06, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.