மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.. பொலீஸார் விசாரணை.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை
 கிழக்குப் பகுதியில் நேற்று (04) வியாழக்கிழமை மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணித் தகராறு காரணமாக 46 வயதான மாமியார் மற்றும் 14 வயதான மைத்துனர் ஆகியோரை குறித்த சந்தேக நபர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் மாமியார் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.. பொலீஸார் விசாரணை.  மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.. பொலீஸார் விசாரணை. Reviewed by Madawala News on August 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.