இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணிலிடம் கையளிப்பு. இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 கடல்சார் கண்காணிப்பு விமானம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.


இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


"பரஸ்பர புரிந்துணர்வு,நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர்228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்", என்று உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்நிகழ்வில் தெரிவித்தார்.

இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணிலிடம் கையளிப்பு.  இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணிலிடம் கையளிப்பு. Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.