நாளை முதல் மின் கட்டணம் அதிகரிக்கப் படுவது இவ்வாறுதான்..மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.

அதனடிப்படையில் நாளை (10) முதல் 75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் 198 ரூபாய் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 60 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணம் 200 வீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது 600 ரூபாவை விட குறைந்த தொகையாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 90 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 276 வீத அதிகரிப்பை மின்சார சபை கோரியிருந்த போதிலும், 125 வீத அதிகரிப்பிற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மின் கட்டணம் அதிகரிக்கப் படுவது இவ்வாறுதான்.. நாளை முதல் மின் கட்டணம் அதிகரிக்கப் படுவது இவ்வாறுதான்.. Reviewed by Madawala News on August 09, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.