கண்டி பிரதேச கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி படுகொலை... நேரில் கண்டவரை மிரட்டி விட்டு சென்ற கொலையாளி. கண்டி தெப்பக்குளம்  ரது பொக்குன சந்திக்கு அருகிலுள்ள பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த

65 வயதுடைய கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கமனி ரணசிங்க (65) என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த பெண் அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரி தரத்தில் பணியாற்றியிருந்தார். வேலையில் இருந்து ஓய்வு பெற்று தனியாக வசித்து வருவதாகவும், பெரிய வீட்டின் அருகில் அதிகளவான கடைகளை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் அந்த பெண்ணின் கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், அவர்களது இரண்டு குழந்தைகளும் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


சுமார் ஐந்தடி உயரமுள்ள கறுப்பு நிறமான நபர் ஒருவர் கையில் கத்தியுடன் அந்த பெண் வசித்த வீட்டில் இருந்து வெளியே வருவதையும், அவரது கை அறுபட்டு ரத்தம் வழிந்ததையும் தான் பார்த்ததாக பெயர் வெளியிட விரும்பாத நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்தார்.


அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டியதால் அவர் அருகில் செல்லவில்லை என்றும் தெரியவருகின்றது.


சிறிது நேரத்திலேயே அந்த பெண் இறந்துவிட்டதால், அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இது குறித்து பொலிஸாருக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.


சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பல கட்டங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி பிரதேச கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி படுகொலை... நேரில் கண்டவரை மிரட்டி விட்டு சென்ற கொலையாளி. கண்டி பிரதேச  கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி படுகொலை... நேரில் கண்டவரை மிரட்டி விட்டு சென்ற கொலையாளி. Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.