இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற உலகின் பலமிக்க நாடாக இருக்கும் – சுதந்திர தின உரையில் மோடி.



இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன், டெல்லி செங்கோட்டையில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. இந்நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்தார்.

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் வானில் உலங்கு வானூர்திகளால் பூக்களை தூவப்பட்டதையடுத்து, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை ஆரம்பமானது.

அவர் தனது உரையில், இந்த சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும், இந்தியா மீது அன்பு கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியர்கள் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி தங்களின் உணர்வை தெரிவித்துள்ளனர்.

இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். விடுதலை போராட்ட வீரர்களின் நினைவை போற்றுவோம்.

அவர்களின் கனவை நிறைவேற்றும் நேரம் இது. தியாகங்கள் தேசபற்றை வளர்க்கிறது. மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், எஸ்.பி. முகர்ஜி, சாஸ்திரி, அம்பேத்கர், லோகியோ ராஜாஜி, பகத்சிங், ராஜ்குரு, ஜெய்பிரகாஷ் நாராயணன், மங்கள் பாண்டே, நேதாஜி, ராணி வேலுநாச்சியார், சுப்பிரமணிய பாரதியார், பழங்குடியின விடுதலை வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் நாம் நினைவு கூருவோம்.

இவர்கள் சுதந்திரத்திற்காக அஹிம்சை, ஆயுதம், அரசியல் சாசனம், கொண்டு போராடினார்கள். ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.

ஆங்கிலேயர்களை வெளியேற்றினால் பொருளாதாரம் பின்னோக்கி சென்று விடும் என்று கூறினார்கள். இன்று இந்தியா வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது.

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும் என்றும் வரும் 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானது.

100 ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக, உலகில் வளர்ந்த நாடாக இருக்கும் என்றார்
இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற உலகின் பலமிக்க நாடாக இருக்கும் – சுதந்திர தின உரையில் மோடி. இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற உலகின் பலமிக்க நாடாக இருக்கும் – சுதந்திர தின உரையில் மோடி. Reviewed by Madawala News on August 15, 2022 Rating: 5

1 comment:

  1. இன்னும் 20 வருடங்களுக்குள் சீனா இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் பலவற்றை தன்னோடு இணைத்துக்கொள்ளும்.பன்றிகளான உங்களால் மயிரை பிடுங்கிக்கொண்டு தான் இருக்க முடியும்

    ReplyDelete

Powered by Blogger.