அரச வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள 15 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லில் பங்கு கேட்டு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்.


ஹட்டன் நகரிலுள்ள அரச வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த

15 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லை வேறோர் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு, வட்டவளை பிரதேச மக்கள் எதிர்ப்பினை தெரிவித்து, குறித்த வங்கிக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றையும் நேற்று (4) முன்னெடுத்தனர். 


வட்டவளை சமுரத்தி பயனாளிகளை இணைத்துக்கொண்டு, 

இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை, வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்டத்தில் உள்ள ஹட்டன்ஓயா ஆற்றில் மாணிக்கக்ல் அகழ்வை முன்னெடுத்தது.

 இதன்போது கிடைக்கும் மாணிக்கக்கற்களை விற்பனை செய்யும் போது கிடைக்கும்  பணத்தில் 10 சதவீதம் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்க ஒப்பந்தமும் செய்யப்பட்டது. 

இதன்போது அகழப்பட்ட 15 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்க கல் ஒன்று, ஒரு வருடமாக ஹட்டனிலுள்ள அரச வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 


இவ்வாறு வைக்கப்பட்டிருந்த மாணிக்கக்கலை  மதிப்பீடு செய்வதற்காக இரத்தினபுரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, சமுர்த்தி பயனாளிகள் அதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


 எனினும் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த மாணிக்கக் கல்லானது, பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இரத்தினபுரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அரச வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள 15 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லில் பங்கு கேட்டு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம். அரச வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள  15 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லில் பங்கு கேட்டு பிரதேச மக்கள்  ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on August 05, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.