இலங்கையில் எஞ்சியுள்ள பெட்ரோல் கையிருப்பு சாதாரண தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட போதுமானதாகயில்லை.



இலங்கையில் எஞ்சியுள்ள பெட்ரோல் கையிருப்பு சாதாரண தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட போதுமானதாகயில்லை என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதால் அரசாங்கம் 12 மாதங்களிற்கு எரிபொருள் இறக்குமதி மீது அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது,எஞ்சியுள்ள பெட்ரோல் கையிருப்பு சாதாரண தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட போதுமானதில்லை,இந்த நிலை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதித்துள்ளது தொழிலிற்கு செல்வதற்கான மக்களின் திறனை பாதித்துள்ளது பாடசாலை அரச அலுவலகங்களை பாதித்துள்ளது என உலக உணவு திட்டம் குறிப்பிட்டுள்ளது.



இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பின்றி உள்ளனர் இந்த நிலை மோசமடையும் என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

6.7 மில்லியன் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க உணவுகளை உண்பதில்லை 3.4 மில்லியன் மக்களிற் அவசர உணவு சத்துணவு பாடசாலை உணவுகளை வழங் திட்டமிட்டுள்ளதாக உலக உணவுதிட்டம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து உணவுப்பொருட்களும் நுகர்வுப்பொருட்களும் அதிகளவு சுமையாக மாறியுள்ளன.இதன் காரணமாக மக்கள் சிறியளவு பொருள்கொள்வனவில் ஈடுபடுகின்றனர் அடிக்கடி சந்தைக்கு செல்கின்றனர் என ஜூன் மாதம் மேற்கொண்;ட சந்தை தொடர்பான கண்காணிப்பு பேட்டிகளின் மூலம் தெரியவந்துள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

உணவு இறக்குமதி மாதாந்தம் 50 மில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது,

முன்னர் இது 130 மில்லியன் டொலராக காணப்பட்டது சத்தான உணவுகள் மற்றும் காய்களின் விலை ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது எனவும் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் எஞ்சியுள்ள பெட்ரோல் கையிருப்பு சாதாரண தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட போதுமானதாகயில்லை.  இலங்கையில் எஞ்சியுள்ள பெட்ரோல் கையிருப்பு சாதாரண தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட போதுமானதாகயில்லை. Reviewed by Madawala News on July 31, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.