அரசு கட்டாரிடம் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளது..



எதிர்காலத் திட்டம் இல்லை என்றால், இலங்கையினால் ஏனைய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது கடினம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


கட்டார் தொண்டு நிறுவனத்திடம் இருந்து உதவிகளை நிராகரித்து கொழும்பு அலுவலகத்தின் செயற்பாட்டுக்கு தடை விதித்தவர்கள் இன்று அவர்களின் உதவியை நாடியுள்ளதாக கூறினார்.


எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய, அதே அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.


கட்டார் அபிவிருத்தி நிதிய அலுவலகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டபோது அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த தன்னை எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் விமர்சித்ததாக கூறினார்.


ஆனால் இன்று அந்த நிதியை பெற்றுக்கொள்ள அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிச்சை பாத்திரத்தை கட்டாருக்கு எடுத்துச் செல்வதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.


அவர்களிடம் பிச்சை எடுக்கத் தொடங்கிய பின்னர், கட்டார் அரசாங்கம் மீதான கருத்துக்களும் சில கட்டுப்பாடுகளும் ஒரே இரவில் மாறிவிட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசு கட்டாரிடம் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளது..  அரசு கட்டாரிடம் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளது.. Reviewed by Madawala News on July 02, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.