மூதூர் ஆதிவாசி மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசேட குழு ஸ்தாபிப்பு i



ஹஸ்பர்_
மூதூர் நல்லூர் பகுதியில் வசிக்கும் ஆதிவாசி
மக்களின் காணி
 பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட காணிகளில் பல்வேறு மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன், தமது காணிகளை மீள வழங்குமாறு பூர்வீககுடிகள் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அந்த கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தப்படாததால், ஆதிவாசிகள் தங்களது குறைகளை ஆளுநரிடம் விளக்கினர்.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் பல தடவைகள் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இது தொடர்பில் ஆராய்வதற்காக ஆளுநர் அண்மையில் மூதூர் பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

பூர்வீக குடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தக் காணிகளில் தற்போது வசிப்பவர்கள் குழுவும் இதற்காக வருகை தந்திருந்தனர். இருதரப்பு கருத்துகளையும் ஆளுனர் இதன் போது எடுத்துரைத்தார்.
அடுத்த வாரத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழுவை நியமித்தார். இந்தக் குழுவில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) தலைமையில் நியமிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர், மூதூர் பிரதேச செயலாளர், மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜனார்த்தன் ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மூதூர் ஆதிவாசி மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசேட குழு ஸ்தாபிப்பு i மூதூர் ஆதிவாசி  மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசேட  குழு ஸ்தாபிப்பு  i Reviewed by Madawala News on June 23, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.