பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் தீண்டினால் வைத்தியசாலைகளில் மருந்து இல்லையா? முன்னாள் சுகாதார அமைச்சர் விளக்கம். I



இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம் வசீம்)
வைத்தியசாலைகளில் விசமுறிப்பு
 மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை.

4 மாத காலத்திற்கு தேவையான விசமுறிப்பு மருந்து மருத்துவ கட்டமைப்பில் உள்ளது. திறைசேரி உரிய நேரத்தில் டொலரை வழங்காத காரணத்தினால் தற்போது ஒருசில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் 22 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது நாட்டில் தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மருத்துவ கட்டமைப்பில் தற்போது ஒருசில மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி அரச மருந்தாக்கல் கூட்டத்தாபனத்தின் தலைவர் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகலவிற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளார்.

மருந்து கொள்வனவிற்கான டொலர் விநியோகத்தில் நிதியமைச்சு உரிய பதிலளிக்காத காரணத்தினால் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வமாக பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டோம்.

அவ்வேளைசுகாதார அமைச்சு 130 மில்லியன் டொலர்களை கோரியது. அப்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் எதிர்வரும் நான்கு மாத காலத்திறகு தேவையான 260 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டதை போன்று மருந்து கொள்வனவிற்கான டொலர் கிடைக்கப்பெறவில்லை.

இதற்காக பல வாரங்கள் காத்திருந்தமை தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளிடம் வினவிய போது அவர்கள் 12 வகையான மருந்துகளுக்கு தேவையான டொலர்களை ஒதுக்க முடியாது என்றும், 1 வகை மருந்துக்கு மாத்திரமே டொலர்களை விநியோகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மயக்கமடைய செய்தல் மற்றும் மயக்கத்தை தெளிவித்தல் மருந்திற்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.இவ்விரண்டில் எதனை தெரிவு செய்வது என்பதை நீங்கள் தெரிவு செய்யுங்கள் என நிதியமைச்சிற்கு குறிப்பிட்டேன்.

மருந்து கொள்வனவிற்கு தேவையான டொலர் விநியோகிப்பதை நிதியமைச்சு தாமதப்படுத்தியதை தொடர்ந்து இந்திய கடனுதவி திட்டம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக தேவையான மருந்தை பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மருந்து கொள்வனவிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வது இலகுவானது அல்ல என்ற காரணத்தினால் ஆசிய அபிவிருத்தி மற்றும் உலக வங்கி ஆகியவை பிற செயற்திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ள நிதியை மருந்து கொள்வனவிற்காக ஒதுக்குமாறு வலியுறுத்தினோம்.

பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியில் தேவையான டொலர் தாமதப்படுத்தபபட்டுள்ள நிலையில் பெற்றுக்கொள்ளப்பட்டாலும் , அது போதுமானதாகவில்லை நிதியமைச்சு டொலர் விநியோகத்தை தாமதப்படுத்தியதால் தற்போது ஒருசில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

பாம்பு உள்ளிட்ட விச உயிரினங்கள் தீண்டினால் வைத்தியசாலைகளில் விச முறிப்பு மருந்து இல்லை என்ற தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.வைத்தியசாலைகளில் விசமுறிப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. 4 மாத காலத்திற்கு தேவையான விசமுறிப்பு மருத்துவ கட்டமைப்பில் கைவசம் உள்ளது என்றார்
பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் தீண்டினால் வைத்தியசாலைகளில் மருந்து இல்லையா? முன்னாள் சுகாதார அமைச்சர் விளக்கம். I பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் தீண்டினால் வைத்தியசாலைகளில் மருந்து இல்லையா? முன்னாள் சுகாதார அமைச்சர் விளக்கம். I Reviewed by Madawala News on June 23, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.