இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்தியா வழங்கும் ; நிதி அமைச்சர் உறுதியளித்தார்.



இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான முழுமையான ஆதரவையும்
 ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்தியாவின் நிதி விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம், உறுதியளித்தார்.


இந்திய உயர்ஸ்தானிகர் மொரகொட நேற்று (21) புதுடில்லியில் உள்ள நிதியமைச்சில் அவரை சந்தித்த போது இந்திய நிதியமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


தற்போதைய நெருக்கடியின் பின்னணியில் இந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக அமைச்சர் சீதாராமனுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட நடத்திய தொடர்ச்சியான சந்திப்புகளில் இது சமீபத்தியதாகும்.

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளுக்காகவும், குறிப்பாக தற்போதைய சாகுபடிக்குத் தேவையான 65,000 மெட்ரிக் டன் யூரியாவை இறக்குமதி செய்வதற்காக ஜூன் 10 ஆம் தேதி வழங்கப்பட்ட 55 மில்லியன் அமெரிக்க டாலர் தனிக் கடனைத் துரிதமாக ஏற்பாடு செய்ததற்காகவும் உயர் ஸ்தானிகர் மொறகொட,
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, நன்றி தெரிவித்தார்.


அமைச்சர் சீதாராமன் தனது மக்களின் மன உறுதியை கருத்தில் கொண்டு இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடன் நலிவடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மீட்பதற்கும் இந்திய உதவிகள் தொடர்பாக முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்தியா வழங்கும் ; நிதி அமைச்சர் உறுதியளித்தார். இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்தியா வழங்கும் ; நிதி அமைச்சர் உறுதியளித்தார். Reviewed by Madawala News on June 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.