முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்து, பலதார திருமணம் தொடர்பில் விசேட அவதானம் i



முஸ்லிம் விவாக-விவாகரத்து சட்ட மறுசீரமைப்பு தொடர்பில்
நியமிக்கப்படட குழு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷவை சந்தித்துள்ளனர்.

இதன்போது முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் மதிப்பீடு செய்து, முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயதை 18 ஆக அதிகரிப்பதற்கும் திருமணத்தின் போது சாட்சி கையெழுத்திடுவதற்கு பெண்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன பலதார திருமணங்கள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டம் தவிர்ந்த, சகல முஸ்லிம் சட்டங்கள் தொடர்பிலும் மதிப்பீடு செய்து, மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்து, பலதார திருமணம் தொடர்பில் விசேட அவதானம் i முஸ்லிம் திருமணங்கள்,  விவாகரத்து, பலதார திருமணம் தொடர்பில் விசேட அவதானம்  i Reviewed by Madawala News on June 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.