இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே
நேற்று பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியின் போது, அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதான நால்வரில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மேற்படி நான்கு மாணவர்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நேற்றைய போட்டியின் போது, பல்லேகலை மைதானத்தில் பல்கலைகழக மாணவி உட்பட 4 மாணவர்கள் கைது.
Reviewed by Madawala News
on
June 17, 2022
Rating:

No comments: