சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான திருட்டு பொருள்களுடன் கணவனும் மனைவியும் கைது20 இலட்ச ரூபாய் பெறுமதியான திருட்டு பொருள்களுடன் கணவனும் மனைவியும் பதுளை

பொலிஸாரால் இன்று அதிகாலை (23) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 60 வயதுடைய கணவனும் அவரின் 57 வயதான மனைவியும் என பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பதுளை- பஹலவத்தயில் உள்ள சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து, வீடுகளை உடைத்து திருடப்பட்ட பொருள்களான சமையல் எரிவாயு சிலிண்டர்கள், சமையல் எரிவாயு அடுப்புகள், மின்சார உபகரணங்கள், சங்கீத உபகரணங்கள், காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.


குறித்த தம்பதியினர் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவரைப் பயன்படுத்தி குறித்த திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய இளைஞரை கைதுசெய்வதற்கான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான திருட்டு பொருள்களுடன் கணவனும் மனைவியும் கைது சுமார்  20 இலட்ச ரூபாய் பெறுமதியான திருட்டு பொருள்களுடன் கணவனும் மனைவியும் கைது Reviewed by Madawala News on June 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.