"கோட்டா கோ கம” செயற்பாட்டாளர்கள் ஜூலை 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் I



கல்வி அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்ற
 போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பல முக்கிய “கோட்டா கோ கம” செயற்பாட்டாளர்கள் ஜூலை 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் அரசாங்கம் மற்றும் சிறிலங்கா பொலிஸாருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த பத்து சந்தேகநபர்கள் மருதானை பொலிஸில் இன்று சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையின் யூடியூபர் ரதிந்து சுரம்யா என்றழைக்கப்படும் ரட்டா, மாணவர் சங்கத் தலைவர் வசந்த முதலிகே மற்றும் முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் லஹிரு வீரசேகர ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
"கோட்டா கோ கம” செயற்பாட்டாளர்கள் ஜூலை 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் I "கோட்டா கோ கம” செயற்பாட்டாளர்கள் ஜூலை 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டனர் I Reviewed by Madawala News on June 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.