மே 9 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள்
தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
கோட்டகோகம எதிர்ப்பாளர்களை தாக்குவதற்காக தான் காலி முகத்திடலுக்கு சென்றதாக வெளியான செய்திகளை மஹிந்த கஹந்தகம மறுத்துள்ளார்.
நான் அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மாநகர சபைக்கு வந்தேன், அதன் பின்னரே சபையில் இருந்து வெளியில் வந்த என்னை தாக்கியதாக அவர் கூறினார்.
தனது கையில் இருந்த 69 என்ற இலக்கத்தை கூட யாரோ ஒருவர் வைத்தியசாலையில்
வைத்து என் கையில் ஒட்டி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர் எனவும்
மஹிந்த கஹந்தகம குற்றம் சுமத்தியுள்ளார்.
VIDEO இணைப்பு » மே 9 ஆம் திகதி நடந்தது இதுதான்... ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த கஹந்தகம
Reviewed by Madawala News
on
May 21, 2022
Rating:

No comments: