சவூதி, ஓமான் பெற்றோலிய கம்பனிகளுடன் என்னால் பேச்சுவார்த்தை நடாத்தி நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க ஒத்தாசை வழங்குவேன். I


 

(அஷ்ரப்  ஏ சமத்)

சுற்றாடல்த்துறை அமைச்சா் பொறியியலாளா் நசீர் அஹமட்   இன்று (24) பத்தரமுல்லையில் உள்ள

சுற்றாடல் அமைச்சில் வைத்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டாா். 


இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளா் வைத்தியா் அனில் ஜெயசிஙக், மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர்களான  அலிசப்றி ரஹீம், காதா் மஸ்தான்,  முஸாரப் ஆகியோறும்  இந் நிகழ்வில் கலந்து கொண்டனா.


இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா். 


 தனக்கு இந்த அமைச்சு ஏறகனவே 20 நாட்களுக்கு முன்பு தரப்பட்டது. தற்போதைய அமைசச்சரவையில் இளம் அமைச்சா்கள், பல கட்சி சாா்ந்தவா்கள் உள்ளனா். 


 இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தன்னால் எடுக்கக வேண்டிய சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவேன். நான் றியாத்தில உள்ள பெற்றோலியம் பல்கலைக்க்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றேன். என்னுடன் கல்விகற்ற ஒரு சிரேஸ்ட மாணவனே தற்போது சவுதி அரேபியாவில் பெற்றோலியத்துறை வள அமைச்சராக கடமையாற்றுகின்றாாா்.  


என்னால் பல முயற்சிகளை  எடுக்க முடியும்.   ஓமான் அரம்கோ பெற்றோலியம் கம்பனிகளுடன் என்னால் பேச்சுவாா்த்தை நடாத்த முடியும்.


நான் ஏற்கனவே கிழக்கு மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய அனுபவம் உண்டு அங்கு ஊழல் அற்ற சிறந்த நிர்வாக கட்டமைப்பினை கட்டியெழுபியது போன்று இ்ந்த அமைச்சின் ஊடாக  பல்வேறு திட்டங்களை வகுத்து நாட்டுக்கு நன்மை கிடைக்க  கூடிய திட்டங்களை வகுத்து சிறந்த அமைச்சு ஒன்றினை சுற்றாடல் அமைச்சினை கட்டியெழுப்ப முடியும். என நசீர் அஹமட் தெரிவித்தாா்.


சவூதி, ஓமான் பெற்றோலிய கம்பனிகளுடன் என்னால் பேச்சுவார்த்தை நடாத்தி நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க ஒத்தாசை வழங்குவேன். I  சவூதி, ஓமான்  பெற்றோலிய கம்பனிகளுடன் என்னால் பேச்சுவார்த்தை நடாத்தி நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க ஒத்தாசை வழங்குவேன். I Reviewed by Madawala News on May 24, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.