ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக்கோரி அனுராதபுரத்தில் தனி நபர் ஆர்ப்பாட்டம். I



ரஞ்சன் ராமனாயக்கவை விடுதலை செய்யக்கோரி அனுராதபுரம் புதிய
பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள டி.எஸ். சேனநாயக்க ரவுண்டர்போர்டில் ரஜரட்ட செண்டோ கெலும் என்பவர் தனி நபராக கடந்த ஏழு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். “ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்”, “ரஞ்சனை விடுதலை செய்து கோட்டா வீடு செல்” என எழுதப்பட்ட இரண்டு பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு அமைதியான முறையில் தனது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்

இது பற்றி அவரிடம் வினவியபோது,

அரசியல் பழிவாங்கல் நோக்கில் கைதுசெய்ய்யப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்க அவர்களை விடுதலை செய்யவேண்டும். கடந்த காலங்களில் கொலை குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட எத்தனயோ கைதிகள் தற்பொழுது ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது மட்டுமில்லாமல் நாட்டில் முக்கிய பதவிகளையும் வகிக்கின்றார்கள். இவ்வாறிருக்கையில் அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டியதற்காகவும், அரசின் பிழையான போக்குகளை விமர்சித்ததன் காரணமாகவும் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்திருப்பதானது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அநீதிக்கு எதிராக போராடுபவர்களை அராஜகமான முறையில் அடக்கும் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்கால சந்ததியினருக்கு பிழையானதொரு எடுத்துக்காட்டாகும். ரஞ்சனை விடுதலை செய்யும்வரை நான் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை. எனவும் தெரிவித்தார்.

தனி நபராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ரஜரட்ட செண்டோ கெலும் என்பவர் 2019 ஆண்டு ITN தொலைக்காட்சியினால் நடாத்தப்பட்ட “யூத் வித் டேலன்ட்” நிகழ்ச்சியில் பங்குகொண்டு தனது கண்களால் பாரம் தூக்கும் திறமையினை வெளிக்காட்டி இருந்திச்சுற்று வரை சென்றவர் என்பதும், எதுவித அரசியல் பின்புலமும் இல்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.மிதுன் கான்
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக்கோரி அனுராதபுரத்தில் தனி நபர் ஆர்ப்பாட்டம். I ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக்கோரி அனுராதபுரத்தில் தனி நபர் ஆர்ப்பாட்டம்.   I Reviewed by Madawala News on May 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.