புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சர்ஜூன் என்பவர் உயிரிழப்பு.புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியாவெவ பகுதியில் 
நேற்று (12) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


புத்தளம் – தம்பபண்ணி பகுதியை சேர்ந்த எம்.யூ.எம்.சர்ஜூன் (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தகத்திலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணம் செய்த கெப் வாகனமும், புத்தளத்தில் இருந்து இராஜாங்கனை பகுதிக்கு வாடகைக்கு சென்றுவிட்டு மீண்டும் புத்தளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் இவ்விரு மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சாலியாவெவ பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சாலியாவெவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சர்ஜூன் என்பவர் உயிரிழப்பு.  புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சர்ஜூன் என்பவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.