மகிந்தவை கைது செய்ய உத்தரவிடுங்கள்! சட்டத்தரணி ஒருவரின் தனிப்பட்ட மனு!முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 7
பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடும்படி கோரி, சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுகொழும்பு 12, புதுக்கடை வீதியைச் சேர்ந்த சட்டத்தரணி சேனக பெரேராவினால் இந்த தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்


இந்த மனு, நேற்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மகிந்தவை கைது செய்ய உத்தரவிடுங்கள்! சட்டத்தரணி ஒருவரின் தனிப்பட்ட மனு! மகிந்தவை கைது செய்ய உத்தரவிடுங்கள்! சட்டத்தரணி ஒருவரின் தனிப்பட்ட மனு! Reviewed by Madawala News on May 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.