இவரை தெரியுமா ? கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் . I கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாடாளுமன்ற

உறுப்பினர் ஒருவரின் அலுவலகம் மீது தீ வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தோன்றிய பின்வரும் பெண் அலுவலகத்தைத் தாக்கி தீவைக்க முன்வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட காணொளி காட்சிகளில் தோன்றும் குறித்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.


இதன்படி, கீழே காட்டப்பட்டுள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 071 859 4949 அல்லது 071 419 66 09 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவரை தெரியுமா ? கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் . I இவரை தெரியுமா ?  கைது செய்ய  பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் . I Reviewed by Madawala News on May 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.