இலங்கையால் கடன்களை மீள செலுத்த முடியாமல் போனமைக்கு வெட்கப்பட்டார் பிரதமர்.



இலங்கையால் சர்வதேச கடன்களை செலுத்த முடியாது போனமை
குறித்து நான் வெட்கப்படுகின்றேன், இறுதியாக நிர்வாகத்தில் இருந்தவர்களே
நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைக்கு காரணம். இவர்களின் தவறான
தீர்மானங்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு நாடு
வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு அவர்
வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இந்த
விடயங்களை தெரிவித்துள்ளார்.


நாட்டின் விவசாயத்துறை பாரிய
வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.


நெல் உற்பத்தி மிக மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் நாடு
பாரிய உணவுப்பஞ்சத்தை எதிர்நோக்கும்
அபாயம் காணப்படுகின்றது.



அதேபோல் இலங்கையில் இன்று
அத்தியாவசிய பொருட்களுக்கு
பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,


வெளிநாட்டு கையிருப்பு இல்லை,
நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன, இவ்வாறான
நிலையில் சுற்றுலாத்துறைக்கு இது
சாதகமாக இருக்குமென நாம் நம்பவில்லை,
கடன்களை செலுத்த முடியாத
நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.



இது குறித்து நான் வெட்கப்படுகின்றேன்.
ஆனால் இதுதான் யதார்த்தமும் கூட,
ஆகவே எமது நட்பு நாடுகளுடன கலந்துரையாடி வருகின்றோம்.


இந்தியா
எமக்கு உதவிகளை செய்து வருகின்றது.


எதிர்வரும் மாதங்களில் ஏனைய நாடுகளில்
உதவிகளும் கிடைக்கும்.
நாட்டின் இன்றைய நிலைக்கு
காரணமானவர்களை தண்டிக்க
வேண்டும் என்ற நிலைப்பாட்டில்
இளைஞர்கள் காலிமுகத்திடலில்
போராடிக் கொண்டுள்ளனர்.


குறிப்பாக
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற
நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர்.


ஒருசில அரசியல் கட்சிகளும் அதனையே
வலியுறுத்திக்கொண்டுள்ளனர்.


எனினும்
மறுபக்கம் சட்டத்தரணிகள் சங்கம்
மாற்றுக்கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.



நிறைவேற்று அதிகாரத்தை நீக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
அவர்களின் நிலைப்பாடாகும்.


ஆகவே
இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகள்
உள்ள காரணத்தினால் 21 ஆம் திருத்தத்தை
கொண்டுவந்து ஒரு நிலையான தீர்மானம்
எடுக்க வேண்டும் எனவும் அவர்
கூறியுள்ளார்.
இலங்கையால் கடன்களை மீள செலுத்த முடியாமல் போனமைக்கு வெட்கப்பட்டார் பிரதமர். இலங்கையால் கடன்களை மீள செலுத்த முடியாமல் போனமைக்கு வெட்கப்பட்டார் பிரதமர். Reviewed by Madawala News on May 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.