நாம் பொழுது போக்கிற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை.. ஆழமான கவலையின் அடிப்படையிலேயே இக்கட்சியின் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளோம். I



எஸ்.எம்.எம்.முர்ஷித்
தமிழ் முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகள் எல்லாம்
ஆளும் கட்சிக்கு ஒரு முகத்தையும் எதிர்கட்சிக்கு ஒரு முகத்தையும் காண்பித்து சமூகத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு அவர்கள் தேன் நிலவு கொண்டாடுகிறார்கள் என ஸ்ரீலங்கா ஜக்கிய முன்னணியின் தலைவர் சித்திக் முகம்மட் ஸதிக் தெரிவித்தார்.


ஓட்டமாவடி கொண்டயன்கேணி பிரதேசத்தில் ஸ்ரீலங்கா ஜக்கிய முன்னணி கட்சியினால் அதன் பொதுச் செயலாளர் எம்.ஜ.சல்மான் வஹாப் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்
இதற்கான தகுந்த பாடம் படிப்பிக்கின்ற நோக்கிலே ஸ்ரீலங்கா ஜக்கிய முன்னணி கட்சியினை நாடளாவிய ரீதியில் வழிநடத்தி வருகின்றேன்.


நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிரதேச சபை உறுப்பினர்களாக இளைஞர்களை உருவாக்கவேண்டும்.


நாட்டிலுள்ள இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டி நாட்டின் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஆணைக்குழு ஒன்று அமைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை நீக்க சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கூறியது போன்று அவரது பல்கலைக் கழக நண்பர் சவுதி அரேபியாவில் எரிபொருள் அமைச்சராக இருந்தால் அவருடன் தொடர்பு கொண்டு எமது நாட்டிற்கு தேவையான எரிபொருளினை பெற்றுக்கொடுக்கும் தார்மீகப் பொறுப்பு அவருக்குள்ளது என்று தமது கருத்தினை தெரிவித்தார்.


கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஐ.சல்மான் வஹாப் கருத்து தெரிவிக்கும்போது இன்றைய இலங்கையின் அரசியல் சூழலாக இருந்தாலும் சரி சமூக பொருளாதார நிலமைகளாக இருந்தாலும் சரி ஒரு நெருக்கடியான நிலமையில் இந்த நாடு இருக்கின்றது என்பதை எல்லோரும் புரிந்திருக்கின்றார்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்..


நெருக்கடியான சூழ் நிலையில் எம்மால் முடிந்த பங்களிப்பினை நாம் வழங்கவேண்டும் என்பதற்காகவே தனியான இந்த கட்சியினை நாம் ஆரம்பித்திருக்கின்றோம்.


இது ஒரு பொழுது போக்கிற்காகவோ அல்லது சாதாரன செயற்பாட்டிற்காகவோ அல்ல ஆழமான கவலையின் அடிப்படையில் இக்கட்சியின் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என்றார்.



இதன்போது கட்சியானது தற்போதைய நாட்டின் நிலவரம் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமது கருத்தினை தெரிவித்தனர்.
நாம் பொழுது போக்கிற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை.. ஆழமான கவலையின் அடிப்படையிலேயே இக்கட்சியின் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளோம். I நாம் பொழுது போக்கிற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை.. ஆழமான கவலையின் அடிப்படையிலேயே இக்கட்சியின் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளோம்.   I Reviewed by Madawala News on May 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.