மகிந்த ராஜபக்சவை நான் மறைத்து வைக்கவில்லை... எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்யுங்கள்.முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை நான் மறைத்து
 வைத்திருப்பதாக தென்னிலங்கை அரசியல் வாதிகள் அப்பட்டமான பொய்களை கூறிவருகின்றனர்.

அவர்கள் 24 மணி நேரமும் எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்யலாம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர் உட்பட அரசாங்கத்தினர் யாராக இருந்தாலும் ஊழல் செய்தமை நிரூபிக்கப்பட்டால் அவர்களுடனான உறவை உடனே முறித்துக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை நான் மறைத்து வைக்கவில்லை... எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்யுங்கள். மகிந்த ராஜபக்சவை நான் மறைத்து வைக்கவில்லை... எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்யுங்கள். Reviewed by Madawala News on May 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.