கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகள் மூலம் அபிவிருத்தி ; வளங்கள் ஊடாக முதலீடுகளை செய்ய திட்டம் - சீன தூதுவர் தெரிவிப்பு.



ஹஸ்பர்_

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் QI Zenhongநேற்று (24) காலை திருகோணமலையில்

உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்தார். 


அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆளுநருக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுநரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார். 


ஆளுநர் அலுவலகத்திற்கு வந்த சீன தூதுவருக்கு உற்சாக வரவேற்பேற்களிக்கப்பட்டது . 


இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு காணப்படுவதாகவும், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா தனது ஆதரவை இலங்கைக்கு வழங்கும் எனவும் தூதுவர் தெரிவித்தார்.



சீன அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 10,000 உலர் உணவுப் பொதிகளை கிழக்கு மாகாண ஆளுநரும் சீனத் தூதுவரும்  தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இதன் போது  வழங்கி வைத்தனர்.


கிழக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசம் எனவும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர்  தூதுவரிடம் எடுத்துரைத்தார்.



பின்னர் கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகள் மூலம் அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்கள் குறித்து சீனத் தூதுவர் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கமளித்தார். மேலும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதுமான  மாகாணத்தின் வளங்கள் தொடர்பான விசேட கையேட்டை ஆளுநர் அவர்கள் தூதுவரிடம் இதன் போது  வழங்கினார்.


இதில் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.எச்.என்.ஜயவிக்ரம, மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிக சிங்க, ஆளுனரின் செயலாளர் மதநாயக்க  உட்பட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகள் மூலம் அபிவிருத்தி ; வளங்கள் ஊடாக முதலீடுகளை செய்ய திட்டம் - சீன தூதுவர் தெரிவிப்பு.  கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகள் மூலம் அபிவிருத்தி ; வளங்கள் ஊடாக முதலீடுகளை செய்ய திட்டம் - சீன தூதுவர் தெரிவிப்பு. Reviewed by Madawala News on May 25, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.