புதிய பிரதமரின் தலைமையின் கீழ் பொருட்களின் விலைகள் குறையவும் வாய்ப்பு...புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொருட்களின் விலைகளை

குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்.  


சீனா, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளின் இராஜதந்திரப் பிரதிநிதிகளுடன் கடந்த சில நாட்களாக பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.


இதன்போது கடனாக இன்றி இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.  


இதேவேளை எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை தொடர்பிலும் புதிய பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.


அதற்கமைய விரைவில் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஒன்றை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமரின் தலைமையின் கீழ் பொருட்களின் விலைகள் குறையவும் வாய்ப்பு...  புதிய பிரதமரின் தலைமையின் கீழ்  பொருட்களின் விலைகள் குறையவும் வாய்ப்பு... Reviewed by Madawala News on May 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.