இன்று டீசல் கப்பல் வருகிறது ; இன்று வராவிட்டால் 17ஆம் திகதி வந்து சேரும் ; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்.டீசல் ஏற்றிவரும் கப்பல் ஒன்று இன்று (14) நாட்டை
 வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இன்று கப்பல் வராவிட்டால் எதிர்வரும் 17ஆம் திகதி வந்து சேரும் என அதன் தலைவர் சாந்த சில்வா தெரிவித்தார்.

தற்போது மருத்துவமனைகள், பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் டீசல் வழங்கப்பட்டு வருவதுடன், பெற்றோல் நிலையங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகம் செய்யப்படுகிறது.

அடுத்த ஒரு வாரத்திற்கு விநியோகிப்பதற்கு போதியளவு பெற்றோல் இருப்புக்கள் உள்ளதாகவும் பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று டீசல் கப்பல் வருகிறது ; இன்று வராவிட்டால் 17ஆம் திகதி வந்து சேரும் ; பெட்ரோலிய கூட்டுத்தாபனம். இன்று டீசல் கப்பல் வருகிறது ; இன்று வராவிட்டால்  17ஆம் திகதி வந்து சேரும் ; பெட்ரோலிய கூட்டுத்தாபனம். Reviewed by Madawala News on May 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.