கிழக்கு மாகாண அரச நிறுவனங்களில் மின் கட்டணத்தை 50% குறைக்க ஆளுநர் உத்தரவு.ஹஸ்பர்_

 மாகாண சபைகளின் கீழ் உள்ள நிறுவனங்களின் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பதற்கு

உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திங்கட்கிழமை (7) மாலை அனைத்து மாகாண அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.


நிதியமைச்சர் பசில் ராஜபக்ச  அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இது  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைத்து மாகாண அரச நிறுவனங்களின் மின்சாரக் கட்டணத்தை குறைந்தபட்சம் 20% ஆகவும் அதிகபட்சமாக 50% ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.


 அறிவுறுத்தல்களுக்கு அமைய, திங்கட்கிழமை (7) முதல் மின் கட்டணத்தை குறைக்குமாறு ஆளுநர் மேலும் உத்தரவிட்டார்.

கிழக்கு மாகாண அரச நிறுவனங்களில் மின் கட்டணத்தை 50% குறைக்க ஆளுநர் உத்தரவு.  கிழக்கு மாகாண   அரச நிறுவனங்களில் மின் கட்டணத்தை 50% குறைக்க ஆளுநர் உத்தரவு. Reviewed by Madawala News on March 08, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.