இலவச அனுமதிக் கட்டணத்துடன் பாடசாலை அனுமதி. ( Yakeen Education Systems)


சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பல நிச்சயமற்ற காரணிகளுடன்

வழமைக்குத் திரும்பிக் கொண்டு இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

கல்வித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.  பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்படுவது   மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

கொரோனா பெருந்தொற்று  ஆரம்பிப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னதாகவே  கண்டி,  அக்குரணை யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் நிறுவனம் கல்விசார் தொழில்நுட்பத்துறையில் ஏராளமான நவீன அம்சங்களை தனது கல்வித் திட்டத்தில் அறிமுகம் செய்திருந்தது.

இதன் விளைவாக பெருந்தொற்று  ஆரம்பித்த உடனடியாகவே ஒன்லைன் மூலமாக திட்டமிட்ட அடிப்படையில் இயங்கும் சம்பூரண பாடசாலையை உடனடியாக ஆரம்பிக்க அவர்களால் முடிந்தது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் ஏராளமான மாணவ மாணவியர் இந்த வகுப்புகளில் கலந்து பயன் பெற்றனர்.

பாடத்திட்டங்கள்  விஷேடமாகப் பயிற்றுவிக்கப்பட்ட மிகத் திறமை வாய்ந்த  ஆசிரியர் குழாத்தினால்  கற்பிக்கப்பட்டு உரிய நேரத்தில்  பூரணப் படுத்தப்பட்டன.

அத்துடன் பரீட்சைகளும்  மிகச் சிறப்பான முறையில் ஒன்லைன் மூலமாகவே நடாத்தப்பட்டன.


யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ்  நிறுவனம் தன்னகத்தே மூன்று சர்வதேசப் பாடசாலைகளைக் கொண்டுள்ளது.  அவை அக்குரணை  , அம்பதன்னையில்  அமைந்துள்ள ஆண் பிள்ளைகளுக்கான யகீன் மொடல் ஸ்கூல் ,  மேலும் பெண் பிள்ளைகளுக்கான நிஸ்வான் மொடல் ஸ்கூல்  அத்துடன் நாவலப்பிட்டியில் அமைந்துள்ள  கனிஷ்ட  மாணவ மாணவியருக்கான யகீன் மொடல் ஸ்கூல்  என்பனவாகும்.


அத்துடன் 2022ம்  ஆண்டிலிருந்து யகீன் மொடல்  ஸ்கூலின்  

சிரேஷ்ட பிரிவைக் கண்டி கட்டுகஸ்தோட்டை நகரத்தில்  ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தி அடையும் தருவாயில் இருக்கின்றன.  

 


இலங்கை  அரச பாடத்திட்டம்  இப்பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமாகக் கற்பிக்கப்படுகின்றது.  இதற்கு மேலதிகமாக  குர்'ஆன் ஹிfப்ல்  வகுப்புக்களும்  இங்கு நடைபெறுகின்றன.


மாணாக்கரின் கல்வி மேம்பாடு, குர்'ஆன்  ஓதுதல்  என்பவற்றுக்கு இணையாக அவர்களது ஆளுமை விருத்தி,  ஒழுக்கம்,  தலைமைத்துவ ஆற்றல்,  மேடைப்பேச்சுத்  திறன் விருத்தி,  விளையாட்டு என்பவற்றின் முன்னேற்றத்திலும் இப் பாடசாலைகள் கூடிய கவனம் செலுத்துகின்றன.


பாடசாலைகளுக்குத் தேவையான  அடிப்படை வசதிகள் யாவற்றையும் இப் பாடசாலைகள் கொண்டிருப்பதுடன் அதற்கு மேலதிகமாக நவீன கல்வி சார் தொழில்நுட்ப வசதிகளை இந்நிறுவனம்  ஏற்பாடு செய்துள்ளது.  

இதன் காரணமாக மாணவர்கள் சவால்கள் நிறைந்த எதிர்காலத்தை சிறப்பாக முகங்கொடுத்து வெற்றியை நோக்கிப் பயணிப்பதற்காகத் தயார்படுத்த படுவதுடன் பெருந்தொற்று  அல்லது வேறு காரணங்களால்  ஏற்படக்கூடிய இடையூறு களிலிருந்தும் இப் பாடசாலைகள் பாதுகாக்கப்படுகின்றன.


2022ம்  ஆண்டிற்கான புதிய மாணவ மாணவிகள் இப்பாடசாலைகளின்  முன்பள்ளி,  மற்றும்  தரம் 1 முதல் 11  வரையான வகுப்புகளுக்கும்  தற்போது சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.


தற்போதைய நாட்டின் நிலைமை மற்றும் சமூகத்தின் நிலைமை போன்றவற்றைக் கருத்திற்கொண்டு மாணவ மாணவியர் இந்த வருடம் அனுமதி கட்டணம் இன்றியே இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.


இது குறித்த மேலதிக விபரங்களை 0766 450 600 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அல்லது வாட்ஸ்அப் மூலமாக 0778 400 600 என்ற இலக்கத்துடன் இணைப்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ளலாம்.


அத்துடன் மின்னஞ்சல் மூலமான தொடர்புகளுக்கு : yaqeenschool@gmail.com


யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் சம்பந்தமான சில வீடியோக்களை கீழுள்ள லிங்க்களை அழுத்தி நீங்கள் பார்வையிடலாம்.

Lanka Lanka Pembara Lanka by Niswan Model School, Srilanka Students

https://www.youtube.com/watch?v=LFjUN8JTa-I


Plant Exhibition of Yaqeen Model School and Niswan Model School

https://www.youtube.com/watch?v=pZm9viZRr3s&t=17s


YAQEEN MODEL SCHOOL SPORTS DAY VIDEO TRAILER

https://www.youtube.com/watch?v=X_Isk3Gqqrg 


Y! Memories – Flashback: Injaz 2018 Yaqeen Model School - Nawalapitiya -

SONG SLIPPERY FISH

https://www.youtube.com/watch?v=8CI2U5dRyHU

இலவச அனுமதிக் கட்டணத்துடன் பாடசாலை அனுமதி. ( Yakeen Education Systems)  இலவச அனுமதிக் கட்டணத்துடன் பாடசாலை அனுமதி. ( Yakeen Education Systems) Reviewed by Madawala News on January 10, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.