Fazlan Farook Foundation மூலம் அல்-அக்ஸா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 50 கதிரைகள் அன்பளிப்பு



60 ஆவது வருடம் காணும் கண்டி வத்தேகம கல்வி வலயத்தில் அமைந்துள்ள அல்-அக்ஸா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அதன் முக்கிய தேவைகளுல் ஒன்று பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் முயற்சியில் FAZLAN FAROOK FOUNDATION அமைப்பினரால் நிறைவு செய்யப்பட்டது. சுமார் 65,000/- ரூபாய் பெறுமதிமிக்க 50 கதிரைகள் இன்று (2022.01.21) காலை பாடசாலைவளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அன்பளிப்புச் செய்யப்பட்டது. 



பாடசாலை அதிபர் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் fபஸ்லான் fபாரூக் fபெளண்டேஷன் நிறுவனத்தின்தலைவர் சாமசிறீ, தேச கீர்த்தி கெளரவ fபஸ்லான் fபாரூக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன்அவரால் மாணவர்களிடம் கதிரைகளும் கையளிக்கப்பட்டன. அத்தோடு பெற்றோர்கள், பழைய மாணவர்கள்மற்றும் நலன்விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 



தகவல்

செயலாளர்,

பாடசாலை அபிவிருத்தி சங்கம்,

அல்-அக்ஸா மு.வி,

குன்னேபான
Fazlan Farook Foundation மூலம் அல்-அக்ஸா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 50 கதிரைகள் அன்பளிப்பு Fazlan Farook Foundation மூலம் அல்-அக்ஸா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 50 கதிரைகள் அன்பளிப்பு Reviewed by Madawala News on January 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.